தேசிய செய்திகள்

‘ரபேல்’ போர் விமான ஒப்பந்த சர்ச்சை: நிர்மலா சீதாராமனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஆம் ஆத்மி எம்.பி.

ரபேல் போர் விமான ஒப்பந்த சர்ச்சை காரணமாக நிர்மலா சீதாராமனுக்கு, ஆம் ஆத்மி எம்.பி. வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

புதுடெல்லி,

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக நிலவி வரும் சர்ச்சைகளால், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். டசால்ட் ஏவியேசன், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் போர் விமானங்களை தயாரிக்க அனுமதிக்கக்கூடாது. இந்த ஒப்பந்தம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை 3 நாட்களில் நிறைவேற்றாவிட்டால், கோர்ட்டை அணுகுவோம் என்று அவர் கூறியுள்ளார்.


கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...