தேசிய செய்திகள்

புதிதாக மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட மூன்று பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

புதுடெல்லி,

டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ராகவ் சதா, அசோக் மிட்டல், தொழிலதிபர் சஞ்சீவ் ஆரோரா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ராகவ் சதா உள்ளிட்ட மூன்று பேருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவைத் தலைவர் அறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

மூவருக்கும் மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமன வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் ரஜ்யசபாவில் விதிகள் குறித்த உறுப்பினர்கள் கையேடு, விதிகள் புத்தகம் ஆகியவற்றை படித்து அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை