இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
யாஸ் புயல், வங்காள விரிகுடாவில் இருந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. புயலால் பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எல்லா உதவிகளையும் அளிக்குமாறு காங்கிரஸ் செயல்வீரர்களை கேட்டுக்கொள்கிறேன்.
அதுபோல், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.