தேசிய செய்திகள்

ரபேல் ஒப்பந்தம்; ‘கர்மவினையில் இருந்து யாரும் தப்ப முடியாது’; ராகுல் டுவிட்டர் பதிவு

ரபேல் போர்விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதை முன்வைத்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டது.

தினத்தந்தி

தேர்தலில் காங்கிரஸ் தோல்விகண்டதால், ரபேல் போர்விமான சர்ச்சை சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு ரூ.9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் தகவல் வௌயிட்டது. அதை மத்திய பா.ஜ.க. அரசு மறுத்தாலும், மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தி திரும்பத் திரும்ப கூறிவந்தது தற்போது நிரூபணம் ஆகியுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று, கர்மா- ஒருவரின் செயல்கள் பதிவாகும் பேரேடு. யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. ரபேல் என்று மத்திய அரசை தாக்கி ஆங்கிலத்தில் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதேபோல இந்தியிலும் அவர் டுவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்