புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,
கடந்த ஆண்டு விவசாயிகளை விட அதிக எண்ணிக்கையில் தொழிலதிபர்கள் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான பத்திரிகை செய்தியை இணைத்துள்ளார்.
அதில், தொழிலதிபர்களோ, விவசாயிகளோ எல்லோரும் மோடி அரசின் மோசமான கொள்கைகளால் பலியானவர்கள்தான். பொருளாதாரத்தை சீரமையுங்கள். உயிர்களை காப்பாற்றுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.