புதுடெல்லி,
ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 21 நாடாளுமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான ஆளும் பிஜூ ஜனதாதளம், சட்டசபை தேர்தலில் 146 தொகுதிகளில் 112 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது.
ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார். அவருக்கு ராகுல் காந்தி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில், 5-வது முறை முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் பதவி ஏற்பது உண்மையில் நம்ப முடியாத ஒரு சாதனை. உங்களுக்கும், ஒடிசா மாநில மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.