தேசிய செய்திகள்

காங்கிரஸ் மட்டுமே ஏழைகள், நடுத்தர மக்களுக்கான ஆட்சி செய்கிறது: ராகுல் காந்தி

ஏழை மற்றும் நடுத்தர இந்திய குடும்பங்களுக்காக ஆட்சி புரிவது காங்கிரஸ் மட்டும்தான் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,015.50-க்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ராகுல் காந்தி நேற்று மத்திய அரசை கடுமையாக சாடியிருந்த நிலையில், இன்று டுவிட்டரில் விமர்சித்து பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:-

"2014-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது சிலிண்டர் விலை ரூ. 410. மானியம் ரூ. 827. 2022-இல் பாஜக ஆட்சியின்போது சிலிண்டர் விலை ரூ. 999. மானியம் ரூ. 0.அப்போது இரண்டு சிலிண்டர் விற்கப்பட்ட விலைக்கு இன்று ஒரு சிலிண்டர் விற்கப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர இந்திய குடும்பங்களுக்காக ஆட்சி புரிவது காங்கிரஸ் மட்டும்தான். அதுதான் நம் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு