கோப்புப் படம் ANI 
தேசிய செய்திகள்

தேர்தலை முன்னிட்டு காங்கிரஸை வலுப்படுத்த ராகுல் காந்தி கர்நாடகா பயணம்..!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று கர்நாடகா வந்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று கர்நாடகா வந்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த பயணம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறியதாவது,

கர்நாடகாவில் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ராகுல் காந்தி கர்நாடகா வந்துள்ளார்.

இன்று மாலை ராகுல் காந்தி தும்கூரில் உள்ள ஸ்ரீ சித்தகங்கா மடத்திற்கு வருகை தருகிறார். டாக்டர் ஸ்ரீ சிவகுமார ஸ்வாமியின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவார். அதன்பின்பு பெங்களூரு தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும் நாளை ராகுல் காந்தி கர்நாடக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு சென்று முன்னணி நிர்வாகிகளுடன் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து