தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவு தற்கொலைக்கு சமம் - லாலுபிரசாத் கருத்து

ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவு தற்கொலைக்கு சமம் என லாலுபிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ராஞ்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தோல்விக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருப்பது குறித்து லாலுபிரசாத் டுவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருப்பது அவரது கட்சிக்கு மட்டுமல்ல, சங்பரிவாருக்கு எதிரான அனைத்து கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தற்கொலை முடிவுக்கு சமம். நேரு குடும்பத்தை தவிர வேறு யாராவது ஒருவர் கட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டால் அவரை ராகுல்காந்தி, சோனியா காந்தியின் ரிமோட் மூலம் இயங்கும் பொம்மையாக நரேந்திர மோடி, அமித்ஷா படை சித்தரிக்கும். ராகுல் காந்தி ஏன் தனது அரசியல் எதிரிகளுக்கு அப்படி ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்