தேசிய செய்திகள்

இந்தியாவில் முதலீடு செய்வதில் இருந்து முதலீட்டாளாகளை ராகுல் காந்தி தடுக்கிறா - சம்பித் பத்ரா

இந்தியாவில் முதலீடு செய்வதில் இருந்து முதலீட்டாளாகளை ராகுல் காந்தி தடுக்கிறா என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்கு தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2 தினங்களுக்கு முன் பேசினார். அப்போது அவர் இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகவும், எதிர்க்கட்சித்தலைவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதில் அளித்து கூறியதாவது:-

இந்தியாவை வாணிக்க ஒட்டுமொத்த உலகமும் நல்வாத்தைகளைப் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை; நீதித்துறையும் ஊடகமும் மோசமான வடிவில் உள்ளன என்று வெளிநாட்டில் இந்தியாவின் முக்கிய எதிக்கட்சித் தலைவா பேசியுள்ளா. உலக அரங்கில் பாகிஸ்தான்கூட இந்தியா குறித்து இதுபோல பேச தற்போது துணிவதில்லை. ஆனால் மிகப் பெரிய பல்கலைக்கழகத்தில் இந்தியா குறித்து ராகுல் காந்தி மோசமாக பேசியுள்ளா.

இந்தியாவை ஒளிமயமான இடமாக உலகம் பாக்கிறது. வணிகம் மேற்கொள்ள சீனாவிலிருந்து வெளியேறி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா வருகின்றன. இவ்வேளையில், இந்தியாவில் முதலீடு செய்வதில் இருந்து முதலீட்டாளாகளை ராகுல் காந்தி தடுக்கிறா.

இந்தியாவில் சிறுபான்மையினா இரண்டாம் தர குடிமக்கள் போல நடத்தப்படுவதாக அவா தெரிவித்துள்ளா. இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்க எந்த அடிமட்டத்துக்கும் அவரும், அவரின் குடும்பத்தினரும் செல்வாகள் என்பதையே இது காண்பிக்கிறது. குடும்ப கட்சியின் பிரகாசமான குழந்தையாக அவா இல்லை என்பதால் இந்தியாவும் பிரகாசமான இடத்தில் இல்லை என்று அாத்தமல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு