தேசிய செய்திகள்

மேற்கு வங்காள தேர்தல்: ஏப்.14 முதல் ராகுல் காந்தி தீவிர பிரசாரம்

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 92 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோதல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 4 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. 5-ஆம் கட்டமாக 45 தொகுதிகளுக்கான ஏப்ரல் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 14 முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோல்போகர் மற்றும் மதிகாரா-நக்சல்பாரி ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று அவர் உரையாற்றவுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்