Image Courtesy : ANI  
தேசிய செய்திகள்

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா குடும்பத்தினருடன் ராகுல் காந்தி நாளை சந்திப்பு..!

சித்து மூஸ் வாலா மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

சண்டிகர்,

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றா.

இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப் முதல்-மந்தி பகவந்த் மான், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சித்து மூஸ் வாலாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சித்து மூஸ் வாலாவின் குடும்பத்தினரை பஞ்சாப்பில் உள்ள அவரது சொந்த கிராமத்தில்  நாளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்