தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு புதிய பொருளாளர் அகமது பட்டேலை ராகுல் நியமித்தார்

ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்த மோதிலால் வோராவை நேற்று நீக்கினார். புதிய பொருளாளராக அகமது பட்டேலை அவர் நியமித்தார். நேற்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடிய அகமது பட்டேலுக்கு காங்கிரஸ் பொருளாளர் பதவி, பிறந்த நாள் பரிசாக அமைந்தது.

மோதிலால் வோராவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் (நிர்வாகம்) என்ற புதிய பதவியை ராகுல் காந்தி உருவாக்கி அளித்து உள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா, கட்சியின் வெளியுறவு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இந்தப் பதவியில் இருந்து வந்தவர் கரன்சிங் ஆவார்.

முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார், கட்சி காரிய கமிட்டியின் நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்