தேசிய செய்திகள்

பிகார்: கட்சியில் பிளவைத் தடுக்க ராகுல் எம் எல் ஏக்களை சந்தித்தார்

பிகார் காங்கிரசின் சட்ட மன்றக்கட்சியில் பிளவு ஏற்படுகின்ற சூழலை அடுத்து துணைத் தலைவர் ராகுல் காந்தி எம் எல் ஏக்களை சந்தித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சி எம் எல் ஏக்களாக 27 பேர் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் நிதிஷ் குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்திற்கு தாவ தயாராக இருக்கின்றனர் என்று செய்திகள் கூறின.

பிகாரில் நிதிஷ் கட்சி, காங்கிரஸ் மற்றும் லாலு கட்சியின் அரசு வீழ்ந்ததையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் நிதிஷ் கட்சியில் இணைவதை விரும்புவதாக நிதிஷ் குமாரே சொல்கிறார். காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு லாலுவின் போக்கு பிடிக்கவில்லை என்பதால் எங்களை நோக்கி வருகிறார்கள் என்றார்.

மேலும் பிகார் அமைச்சரவையில் எட்டு இடங்கள் காலியாக உள்ளன. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு லாலு கட்சி அமைச்சர்களை அவர்களது அரசு வீட்டை காலி செய்யச் சொன்ன அரசு இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்களை அவ்வாறு செய்ய கோரவில்லை. எனவே காங்கிரஸ் உறுப்பினர்களை நிதிஷ் கட்சி இழுக்கிறது என்று பரவலாக சந்தேகிக்கப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்