இந்த முடிவால் 4 ஆயிரம் சிறு நிறுவனங்கள் மூடப்படும் என்று தொழில்துறையினர் கூறியிருப்பது அச்செய்தியில் இடம்பெற்றுள்ளது. அந்த பதிவில், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைக்கும், வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான், மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி. வேலையே இல்லாதபோது, அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் என்ன? திங்கட்கிழமையாக இருந்தால் என்ன? என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.