தேசிய செய்திகள்

ஜனாதிபதி உரையின்போது ராகுல் செல்போன் பயன்படுத்தியதை பிரச்சினை ஆக்குவதா? காங்கிரஸ் கண்டனம்

ஜனாதிபதி உரையின்போது ராகுல் செல்போன் பயன்படுத்தியதை பிரச்சினை ஆக்குவதா? காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரையாற்றிய போது, அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவனம் செலுத்தாமல், தன் தாயார் சோனியாவுடன் பேசிக்கொண்டும், செல்போன் பயன்படுத்திக்கொண்டும் இருந்தார் என பாரதீய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இப்படி விமர்சிப்பது அற்பத்தனமானது, விரும்பத்தகாதது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா குறிப்பிட்டார்.

ஜனாதிபதி உரையின் சில அம்சங்களை தனது தாயாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளத்தான் ராகுல் காந்தி முயற்சித்தார் எனவும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்