தேசிய செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய ரெயில் பயணிகள் - மீட்பு குழுவினருக்கு அமித்ஷா பாராட்டு

வெள்ளத்தில் சிக்கிய ரெயில் பயணிகளை பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினருக்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வெள்ளத்தில் சிக்கிய ரெயில் பயணிகளை பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், இந்திய கடற்படையினர், ராணுவத்தினர், விமானப்படையினர், ரெயில்வே துறையினர் மற்றும் மாநில நிர்வாகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்டு, மும்பை அருகே வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

அவர்களது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மீட்புக் குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?