தேசிய செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்து: ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் - ராகுல்காந்தி

ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தும் இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஒடிசா ரெயில் கோர விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக அனுதாபங்களை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவி விலகுவாரா என கேட்கின்றனர்.

இந்தநிலையில், ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தும் இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை, யாரிடமும் உரிய பதில் இல்லை, இத்தகைய மோசமான விபத்திற்கு பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிய ஒளிய முடியாது.

ரெயில்வே மந்திரி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் பிரதமர் மோடி உடனடியாக ரெயில்வே மந்திரியை பதவி விலகச்சொல்ல வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது