தேசிய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி நிதி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #UnionBudget2018 #Budget2018 #RailwayProjects

தினத்தந்தி

புதுடெல்லி

2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.

இதில் ரயில்வே துறைக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒசூர் பெங்களூரு இடையிலான 48 கிலோ மீட்டர் தூர இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கான 376 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் 20 ஆயிரத்து 64 கோடி ரூபாய் மதிப்பிலான 27 ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதில் 3,198 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையும் அடங்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சமாக, உத்தரப்பிரதேச மாநில ரயில்வே திட்டங்களுக்கு 7,685 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்