புதுடெல்லி,
உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமை இந்திய ரயில்வேக்கு உண்டு. பல லட்சம் ஊழியர்களைக் கொண்ட பெருமைக்குரியது இந்திய ரெயில்வே. இந்தநிலையில் ரெயில்வேயில் 13 லட்சம் ஊழியர்களில் 13,000க்கும் அதிகமான ஊழியர்கள் நீண்டகாலமாக அதிகாரபூர்வமற்ற விடுப்பில் சென்று இருப்பதை ரெயில்வே நிர்வாகம் கண்டறிந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் உத்தரவில் கூறியிருப்பதாவது:
காரணமின்றி நீண்டகால விடுப்பில் இருக்கும் ரெயில்வே ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். ரெயில்வே ஊழியர்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சரியான காரணம் இல்லாமல் 13,000க்கும் அதிகமான ஊழியர்கள் நீண்டகால விடுப்பில் இருப்பதால் ரயில்வே அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரின் இந்த உத்தரவால் அதிகாரபூர்வமற்ற விடுமுறையில் இருக்கும் 13521 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கைகள் முதல் கட்ட நடவடிகைகள் தொடங்கி உள்ளன.