திருவனந்தபுரம்,
கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 50 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், இன்றும் நாளையும் மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
இதனை முன்னிட்டு கேரள அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், நிலைமைக்கு ஏற்ப முன்பே நிவாரண முகாம்கள் மற்றும் பிற அவசரகால ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்வதற்காக, ஒவ்வொரு கிராம அதிகாரிக்கும் ரூ.25 ஆயிரம் மாவட்ட கலெக்டர்கள் சார்பில் விடுவிக்கப்படும் என தெரிவித்து உள்ளது.