தேசிய செய்திகள்

மராட்டிய கடலோர பகுதியில் கனமழை, சூரத்தில் ‘ஒகி’ புயல் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு, என்டிஆர்எப் உஷார்

மராட்டிய மாநிலத்தில் கடலோர பகுதியில் கனமழை பெய்து வருகிறது, சூரத்தில் ‘ஒகி’ புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை,

வங்கக்கடலில் உருவான ஒகி புயல் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவை புரட்டி எடுத்தது. தற்போது அந்த புயல் லட்சத்தீவில் இருந்து வடமேற்காக நகர்ந்தது. இந்த புயல் தீவிரமடைந்து குஜராத் நோக்கி திரும்பி உள்ளது. இதன் காரணமாக வடமராட்டியம் மற்றும் தென்குஜராத் பகுதிகளில் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என மும்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஒகி புயல் எதிரொலியாக மும்பை உள்பட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஒகி புயல் காரணமாக மராட்டிய மாநிலத்தில் காலை முதல் மழை பெய்து வருகிறது. மராட்டிய கடலோர பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

குஜராத் மாநிலம் சூரத்தில் ஒகி இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் குஜராத் மற்றும் மராட்டியத்தில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மராட்டியத்தில் ஒகி புயல் காரணமாக அரபிக்கடலில் சீற்றம் காணப்படுகிறது. மராட்டியத்தில் கடலோரத்தில் இருக்கும் குடிசை பகுதிக்குள் கடல் நீர் செல்லும் அளவிற்கு அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அரபிக்கடலில் 5.04 மீட்டர் அளவிற்கு அலை எழுந்து வருகிறது. இதுவே நாளை 5.05 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்டிஆர்எப்

குஜராத்தில் ஒகி புயல் கரையை கடக்கும் என்ற நிலையில் அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்) தயார் நிலையில் உள்ளது.

சூரத் மாவட்ட மாஜிஸ்திரேட் மகேந்திரா பட்டேல் பேசுகையில் இன்று நகரில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பலமாக காற்று வீசும். இரவு வெளியே செல்ல வேண்டாம் என மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. எளிதாக பாதிப்புக்கு உள்ளாகும் வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்து வருகிறது என கூறிஉள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...