தேசிய செய்திகள்

ஆபாசபட வழக்கில் மும்பை கோர்ட்டில் ராஜ்குந்த்ரா ஜாமீன் மனு தாக்கல்

ஆபாசபட வழக்கில் மும்பை கோர்ட்டில் ராஜ்குந்த்ரா ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

தினத்தந்தி

மும்பை,

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. இவரை கடந்த ஜூலை மாதம் 19-ந்தேதி ஆபாசபட வழக்கில் மும்பை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ராஜ்குந்த்ராவுடன் சேர்த்து 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை ஹாட் சாட்ஸ் என்ற செயலியில் பதிவேற்றம் செய்து அதிகளவில் பணம் சம்பாதித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்தநிலையில் தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா ஜாமீன் கேட்டு மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த ஜாமீன் மனுவில், சர்ச்சைக்குரிய வீடியோ எடுத்ததாக கூறப்படுவதில் ராஜ்குந்த்ரா ஈடுபட்டார் என்பதை கூற குற்றப்பத்திரிகையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இந்த வழக்கில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன். இதேபோல ஹாட் சாட்ஸ் செயலி சட்ட விரோதமானது என்பதை கூறும் வகையிலும் துளி கூட ஆதாரம் இல்லை. என அதில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?