தேசிய செய்திகள்

கைது நடவடிக்கைக்கு எதிரான ராஜ்குந்த்ராவின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

கைது நடவடிக்கைக்கு எதிராக ராஜ்குந்த்ரா தாக்கல் செய்த மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

தினத்தந்தி

மும்பை,

பிரபல இந்தி நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. தொழில் அதிபரான இவரை ஆபாச படம் எடுத்து, அதை செல்போன் செயலிகளில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 19-ந் தேதி கைது செய்தனர்.

மேலும் 20-ந் தேதி ராஜ்குந்த்ராவின் நிறுவன தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை அதிகாரி ரியான் தோர்பேவும் கைது செய்யப்பட்டார். தற்போது 2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ராஜ்குந்த்ரா, ரியான் தோர்பே ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அவர்களின் மனுவை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்து இருந்தார்.

இந்தநிலையில் தங்கள் மீதான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என 2 பேரும் மும்பை ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர். தங்களை உடனடியாக விடுவித்து, மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த 2 உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்