தேசிய செய்திகள்

ராஜஸ்தான் கவர்னர், தேர்தல் விதிமுறைகளை மீறினார் - ஜனாதிபதியிடம், தேர்தல் கமிஷன் புகார்

ராஜஸ்தான் கவர்னர், தேர்தல் விதிமுறைகளை மீறினார் என ஜனாதிபதியிடம், தேர்தல் கமிஷன் புகார் அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங் தன் வீட்டில் கடந்த மாதம் 23-ந் தேதி பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பேசுகையில், நாம் அனைவரும் பா.ஜ.க தொண்டர்கள். நம் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். மோடி பிரதமராவது காலத்தின் கட்டாயம் என கூறியிருந்தார்.

அரசு உயர் பதவியில் இருப்பவர் அரசியல் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் என எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தன. இதை பரிசீலித்த தேர்தல் கமிஷன், கல்யாண் சிங் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் என உறுதி செய்தது. இது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, தேர்தல் கமிஷன் புகார் கடிதம் அனுப்பி உள்ளது.

பா.ஜ.க.வை சேர்ந்த கல்யாண் சிங், உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பதவி வகித்து உள்ளார்.

இதேபோல் 1990-களில் இமாசல பிரதேச கவர்னர் குல்சர் அகமது தன் மகனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார். தேர்தல் விதிமுறையை மீறியதாக தேர்தல் கமிஷன் கூறியதால், அவர் உடனே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு