ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் பரத்பூர் நகரில் ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளைக் கையாளும் மாவட்ட சிறப்பு நீதிபதியாக ஜிதேந்திர சிங் உள்ளார்.
இவர் மீது 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தல் மற்றும் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சிறுவனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பரத்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.கடந்த ஒன்றரை மாதங்களாக சிறுவனை மிரட்டி நீதிபதி துன்புறுத்தியதாக அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.மேலும் சிறுவனை மிரட்டி ஆபாச படம் எடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நீதிபதி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அவரை ராஜஸ்தான் ஐகோர்ட்டு உடனடியாக இடைநீக்கம் செய்து உள்ளது.
ராஜஸ்தான் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் ஐகோர்ட்டு பதிவாளர் இந்த ஆணையை நேற்று வெளியிட்டார்.