தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இன்று மேலும் 17,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜஸ்தானில் இன்று மேலும் 17,269 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானில் இன்று மேலும் 17,269 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,80,846 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,084 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் ராஜஸ்தானில் கொரோனா தொற்றுக்கு 10,964 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 407,243 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 1,69,519 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்