தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

ராஜஸ்தானில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தினத்தந்தி

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்பூர் மாவட்டத்தில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மருத்துவமனை பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர்கள். அந்த பகுதியில் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேறகொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 50-ல் இருந்து 170- ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை