தேசிய செய்திகள்

“ராஜீவ்காந்தி விருதுகளால் அறியப்படுபவர் அல்ல, தியாகத்தால் அறியப்படுபவர்” - ரந்தீப் சுர்ஜேவாலா

தயான்சந்த் பெயரை கேல்ரத்னா விருதுக்கு சூட்டியதை காங்கிரஸ் வரவேற்கிறது என அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கேல்ரத்னா விருதில் ராஜீவ்காந்தி பெயர் நீக்கப்பட்டது. மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருது என்று மாற்றப்படுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதை காங்கிரஸ் கட்சி வரவேற்றபோதிலும், பிரதமர் மோடியை குறை கூறியுள்ளது. அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அளித்த பேட்டி வருமாறு:-

மேஜர் தயான்சந்த் பெயரை கேல்ரத்னா விருதுக்கு சூட்டியதை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால், தனது குறுகிய அரசியல் நோக்கத்துக்கு தயான்சந்த் பெயரை பிரதமர் மோடி இழுத்திருக்க வேண்டாம். விருதுகளால் அறியப்படுபவர் அல்ல, ராஜீவ்காந்தி. தனது தியாகத்தால் அறியப்படுபவர்.

இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும். இதுபோல், மைதானங்களுக்கு சூட்டப்பட்ட நரேந்திர மோடி, அருண் ஜெட்லி ஆகிய பெயர்களையும் நீக்கிவிட்டு, மில்காசிங், தெண்டுல்கர், கவாஸ்கர் போன்ற விளையாட்டு வீரர்கள் பெயரை சூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு