தேசிய செய்திகள்

தேசிய பாதுகாப்பு படை கமோண்டாக்கள் செயல்பாடுகள் குறித்து ராஜ்நாத்சிங் ஆய்வு

தேசிய பாதுகாப்பு படை கமோண்டாக்கள் செயல்பாடுகள் குறித்து ராஜ்நாத்சிங் ஆய்வு மேற்கொண்டார்.

புதுடெல்லி,

தேசிய பாதுகாப்பு படை கமோண்டாக்களின் செயல்பாடுகள் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஆய்வு நடத்தினார். டெல்லியில் மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணிகளையும் பயங்கரவாத தடுப்பு பணிகளையும் செய்யும் உயர்மட்ட படையான என்.எஸ்.ஜி என்னும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் சுதிப் பிரதாப் சிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இந்த ஆலோசனையின் போது பயங்கரவாத சூழல்கள் ஏற்படும் போது கருப்பு பூனை என அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையின் தயார் நிலைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தேசிய பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் நெருக்கடியான தருணத்தில் சூழலை விரைவாக கையாளும் வகையில் 24 மணி நேரமும் விழிப்புடன் இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் அதிகாரிகள் கூறியதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆலோசனையின் போது, உள்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ மற்றும் உள்துறை செயலர் ராஜீவ் மெஹரிஷி உள்ளிட்ட உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு