புதுடெல்லி
பிரான்சின் 36 ரபேல் விமானங்களில் முதல்கட்டமாக அளிக்கப்பட்ட 5 விமானங்கள் அரியானா மாநிலம் அம்பாலா விமான படைதளத்தை ஜூலை 29ம் தேதி வந்தடைந்தன. அந்த விமானங்கள், இந்திய விமானப்படையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் சேர்க்கப்படவுள்ளன.
செப்டம்பர் 4 முதல் 6 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ள பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் ரஷியாவில் இருந்து திரும்பிய பின்னர் விழா நடைபெறும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிகழ்ச்சிக்கு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு இந்திய விமானப்படையின் 17ஆவது கேல்டன் அரேஸ் படைப்பிரிவின் அங்கமாக 5 ரபேல் விமானங்களும் திகழும்.
அடுத்த 10-12 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 300 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தேவைப்படுகின்றன, அது இந்திய மற்றும் வெளிநாடடுகளில் இருந்து பெற திட்டமிடப்பட்டுள்ளது.