தேசிய செய்திகள்

2 நாள் பயணமாக நாளை மறுநாள் கம்போடியா செல்கிறார் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்...!

2 நாள் பயணமாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நாளை மறுநாள் கம்போடியா செல்கிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9வது வருடாந்திர கூட்டத்தை கம்போடியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு கம்போடியா துணைப் பிரதமரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பின் பேரில், பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக நாளை மறுநாள் கம்போடியா செல்கிறார்.

23-ந் தேதி ஆசியான் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். மேலும் கம்போடியா பிரதமரையும் ராஜ்நாத்சிங் சந்திக்கிறார். ஆசியான் நாடுகளின் கூட்டம் மற்றும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் தவிர, பாதுகாப்பு அமைச்சர்களுடன் இருதரப்பு விவாதங்களையும் அவர் நடத்துகிறார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ராஜ்நாத் சிங் விவாதிக்க உள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை