கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மாநிலங்களவை: ஜூன் மாதம் முடிகிறது தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம்..!!

மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூன் மாதம் முடிகிறது. இதன்படி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும் நிறைவடைகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 12 பேரை சேர்த்து 245 உறுப்பினர் இடங்கள் உள்ளன. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இங்கு உறுப்பினர்களாக உள்ளவர்களில் 3-ல் 2 பங்கு பேரின் 6 ஆண்டு பதவிக்காலம் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். இதன்படி வருகிற ஜூன் மாதம் 20 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இதில் தமிழகத்தில் இருந்து 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. அதாவது தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அ.தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வக்கீல் நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேருக்கும் வருகிற 29.6.2022 அன்று பதவிக்காலம் முடிகிறது.

இதைப்போல கர்நாடகத்தில் பதவிக்காலம் நிறைவடையும் மாநிலங்களவை உறுப்பினர்களில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து