தேசிய செய்திகள்

ராம் ஜெத்மலானி மறைவு: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

அதில், இந்தியாவின் தலை சிறந்த வக்கீல்களில் மிகவும் புகழ் பெற்றவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம் ஜெத்மலானி உடல்நல குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தோம். அவரின் அரும்பணிகளை இந்திய நாடு இன்னும் பல ஆண்டுகள் நினைவில் வைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்