தேசிய செய்திகள்

ராம்ஜெத்மலானி இறந்ததால் காலியான இடம்: மாநிலங்களவை இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி

ராம்ஜெத்மலானி இறந்ததால் காலியாக இருந்த இடத்துக்கு நடந்த மாநிலங்களவை இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்றது.

தினத்தந்தி

பாட்னா,

பீகாரில் இருந்து ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த புகழ்பெற்ற வக்கீல் ராம்ஜெத்மலானி சமீபத்தில் மரணமடைந்தார். இதனால் காலியாக இருந்த அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் பா.ஜனதா சார்பில் சதிஷ் சந்திர துபே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரைத்தவிர வேறு யாரும் இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் சதிஷ் சந்திர துபே போட்டியின்றி தேர்வானதாக நேற்று அறிவிக்கப்பட்டார்.

இவர் மோடி தலைமையிலான முந்தைய பா.ஜனதா அரசில் மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். இடைத்தேர்தல் மூலம் வெற்றிபெற்றுள்ள சதிஷ் சந்திர துபேயின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டு நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து