தேசிய செய்திகள்

காஷ்மீரில் ஏற்பட்ட புதிய கூட்டணி; பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை! தலைவர்கள் டுவிட்டரில் சண்டை

பாகிஸ்தான் உத்தரவால்தான் காஷ்மீரில் புதிய கூட்டணி. பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் பா.ஜனதாவிற்கு எதிராக மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜனதா, தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைக்க உரிமை கோரிய நிலையில் காஷ்மீர் சட்டசபை நேற்றிரவு திடீரென கலைக்கப்பட்டது.

இதுதொடர்பான விவாதம் தொடரும் நிலையில் பா.ஜனதா தலைவர் ராம் மாதவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எல்லையைத் தாண்டி பெற்ற உத்தரவின் காரணமாகவே மக்கள் ஜனநாயக கட்சி, தேசியமாநாட்டு கட்சி உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தது. அதே போன்று புதியதாக கூட்டணி ஆட்சியமைக்கவும் பாகிஸ்தானில் இருந்து உத்தரவை பெற்று இருக்கலாம். அவர்களுடைய நகர்வு, ஆளுநரை முழு விவகாரத்தையும் கவனிக்கத் தூண்டியது, என்றார்.

இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, உங்களுடைய குற்றச்சாட்டை முதலில் நிரூபியுங்கள் என்று சவால் விடுக்கிறேன். ரா உளவுப்பிரிவு, தேசிய பாதுகாப்பு பிரிவு மற்றும் உளவுத்துறை பிரிவு உங்களிடைய கட்டளையில் உள்ளது (சிபிஐயும் உங்களுடைய கிளிதான்) எனவே பொதுதளத்தில் ஆதாரங்களை வைப்பதற்கான தைரியம் உள்ளது. ஒன்று நிரூபியுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள். துப்பாக்கி சூடு மற்றும் அரசியல் சூட்டை நடத்த வேண்டாம், என்று காட்டமாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ராம் மாதவ், உங்களுடைய தேசப்பக்தி தொடர்பாக கேள்வி எழுப்பவில்லை. ஆட்சியமைக்க தேசிய மாநாட்டு கட்சிக்கு திடீரென மக்கள் ஜனநாயக கட்சியுடன் நெருக்கம் ஏற்பட்டது அரசியல் கருத்துக்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. உங்களை அவமதிக்கவில்லை என்று சுமைலி எமேஜை தட்டிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள உமர் அப்துல்லா, தவறான முயற்சிகள் நகைச்சுவையில் வேலை செய்யாது. எங்களுடைய கட்சி பாகிஸ்தானின் சார்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். அதனை நிரூபிக்க உங்களுக்கு சவால் விடுக்கிறேன். பாகிஸ்தான் உத்தரவின் பெயரில்தான் நாங்கள் தேர்தலை புறக்கணித்தோம் என்ற உங்களுடைய குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை வெளியிடுங்கள். இது உங்களுக்கும் உங்களுடைய அரசுக்கும் வெளிப்படையான சவாலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு