தேசிய செய்திகள்

ராம ராஜ்ஜியம் வரப்போகிறது.. 2024 தேர்தலில் நல்லதே நடக்கும்: ராமர் கோவில் தலைமை பூசாரி பேட்டி

அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு சிறந்த ஆட்சியை குறிக்க ராம ராஜ்ஜியம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

தினத்தந்தி

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அயோத்தியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்நிலையில், ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது, அயோத்தியில் வளர்ச்சித்திட்ட பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்றிருப்பதாக தெரிவித்தார். ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு அமைதி மட்டுமல்ல, 'ராம ராஜ்ஜியம்' வரப்போகிறது என்று கூறினார்.

ராமர் கோவிலில் அடுத்து நடைபெற உள்ள கட்டுமான பணிகள் குறித்து கேட்டதற்கு, "இந்த புத்தாண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டில் நிறைய பணிகள் செய்ய வேண்டும். வரும் 22ல் கோவில் கருவறையில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவார். அதன்பின்னர் மக்களவை தேர்தல் நடக்கும். இந்த ஆண்டில் இவை அனைத்தும் சுபமாகவும், நல்லதாகவும் அமையும்" என்றும் அவர் கூறினார்.

அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு சிறந்த ஆட்சியை குறிக்க ராம ராஜ்ஜியம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து