தேசிய செய்திகள்

ராமர் கோவில் குடமுழுக்கு; அயோத்தியில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவிற்கு ஏற்பாடு

சர்வதேச பட்டம் விடும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அயோத்தி மேம்பாட்டு ஆணையம் செய்து வருகிறது.

தினத்தந்தி

அயோத்தி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, அயோத்தி நகரில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை நடத்த உத்தர பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அயோத்தி மேம்பாட்டு ஆணையம் செய்து வருகிறது.

இந்த பட்டம் விடும் திருவிழா வரும் 19 முதல் 21-ந் தேதிக்கு இடையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துவதற்காக ஒரு தனியார் நிறுவனத்தை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது