தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது மகனும் லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவில், "என தந்தை கடந்த பல நாள்களாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று மாலை நிகழ்ந்த சில திடீர் முன்னேற்றங்கள் காரணமாக, அவரது இதய அறுவை சிகிச்சை இரவில் நடத்தப்பட்டது. தேவை ஏற்பட்டால், வரும் வாரங்களில் மற்றொரு அறுவை சிகிச்சை நடத்தப்படலாம்.இந்த தருணத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி "என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது