ஸ்ரீகாளஹஸ்தி,
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி பிரசன்ன வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள ராம மந்திரத்தில் சீதா, ராமர் திருக் கல்யாண உற்சவம் நடந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்க தடை விதித்து ஏகாந்தமாக நடந்தது. முன்னதாக மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருக்கல்யாண உற்சவத்தில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு. மதுசூதன் ரெட்டி, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் வேதப் பண்டிதர்கள் பலர் கலந்து கொண்டனர்.