தேசிய செய்திகள்

2024-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் - விஸ்வ இந்து பரிஷத் நம்பிக்கை

2024-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் என விஸ்வ இந்து பரிஷத் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

இந்தூர்,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் சர்வதேச தலைவர் விஷ்ணு சதாசிவ கோக்ஜே கூறுகையில், ராமஜென்மபூமி நியாஸ் தயாரித்துள்ள வடிமைப்பின்படி பிரமாண்டமான கோவில் அயோத்தியில் கட்டப்படும். கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்படும் அறக்கட்டளை மூலம் இந்த கோவில் கட்டப்படும். 2024-ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோவில் இருக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

நூற்றாண்டு பழமையான பிரச்சினையில் சமநிலையான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பதாக கூறிய விஷ்ணு கோக்ஜே, எனவே இந்த தீர்ப்பால் எந்த பிரிவினருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை என்றும் குறிப்பிட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை