தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தை முடக்கும் எம்.பி.க்களை 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்ய வேண்டும்: ராம்தாஸ் அத்வாலே

நாடாளுமன்றத்தை முடக்குபவர்களை 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்ய சட்டமியற்ற வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

தினத்தந்தி

நாடாளுமன்ற முடக்கம்

பெகாசஸ் உளவு வலைதள பிரச்சினை, வேளாண் சட்டங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.இந்த நிலையில் இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதிய சட்டம்

நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் கடந்த 3 நாட்களாக சபையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் தங்கள் இடத்தை விட்டு நாடாளுமன்ற மைய பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டு நாட்டின் விலைமதிப்பற்ற நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கிறார்கள். நாடாளுமன்றத்தை முடக்கும் செயலில் ஈடுபடும் உறுப்பினர்களை 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை வகுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்