தேசிய செய்திகள்

அலோபதி மருந்து குறித்த தனது கருத்தை திரும்ப பெறுவதாக பாபா ராம்தேவ் அறிவிப்பு

ஆங்கில மருத்துவத்தை 'முட்டாள் மருத்துவம்' என பாபா ராம்தேவி கூறியது சர்ச்சையை கிளப்பியது.

தினத்தந்தி

மும்பை,

யோகா குரு பாபா ராம்தேவ் அலோபதி (ஆங்கில) மருத்துவம் குறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்து இருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை 'முட்டாள் மருத்துவம்' என கூறியிருந்தார்.

மேலும் இதுகுறித்து அவர் பேசிய வீடியோவில், ஆங்கில மருந்துகளை சாப்பிட்ட லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர், இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த ரெம்டெசிவிர், பவிபுளு, மற்ற மருந்துகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தவறிவிட்டது என கூறியிருந்தார்.

பாபா ராம்தேவின் பேச்சுக்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதுகுறித்து மராட்டிய கொரோனா பணிக்குழு உறுப்பினரும், மருத்துவ நிபுணரான டாக்டர் சசாங் ஜோஷி பாபா ராம்தேவ் குறித்து கூறுகையில், " இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளை கூறுவது தவறானது ஆகும். ரெம்டெசிவிர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர உதவுகிறது.

ஆனால் அது உயிர்காக்கும் மருந்து அல்ல. மேலும் அந்த மருந்து யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆங்கில மருத்துவம் குறித்து இதுபோன்ற கருத்துகள் கூறுவது தவறாகும். ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளை நான் மதிக்கிறேன். " என்றா. இதற்கிடையே, பாபா ராம்தேவ் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி அவருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹாஷ் வாதன் கடிதம் ஒன்றை எழுதினா.

அதனைத் தொடாந்து, தனது கருத்தைத் திரும்பப் பெறுவதாக ராம்தேவ் தெரிவித்துள்ளா. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'மத்திய அமைச்சரின் கடிதம் கிடைத்தது. பல்வேறு மருத்துவ முறைகள் குறித்த சாச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எனது கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்' எனத்தெரிவித்துள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை