தேசிய செய்திகள்

பெண் தோழியை சுட்டுக்கொன்ற நபர் பேஸ்புக் நேரலையில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

பெண் தோழியை சுட்டுக்கொன்ற நபர் பேஸ்புக் நேரலையில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பெண் தோழியை சுட்டுக்கொன்ற நபர் பேஸ்புக் நேரலையில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று அங்கித் அஹிர் என்ற பேஸ்புக் கணக்கில் நேரலைக்கு வந்த நபர் தன்னுடைய பெண் தோழியை சுட்டுக் கொன்றுவிட்டதாக தெரிவித்தார். பின்னர் என்னை நானே கொல்லப் போகிறேன் என்று கூறிய அவர், நேரலையில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கித்தின் உடலை கைப்பற்றினர்.

விசாரணையில் முன்னதாக ராஞ்சியின் அர்கோரா பகுதியில் வெள்ளிக்கிழமை நிவேதிதா (வயது 20) என்ற இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. உயிரிழந்த நிவேதிதா பீகாரில் உள்ள நவாடா மாவட்டத்தை சேர்ந்தவர். நிவேதிதாவும் அதே பகுதியைச் சேர்ந்த அங்கித்தும் காதலித்துள்ளனர்.

இது நிவேதிதாவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து நிவேதிதா அங்கித்துடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் அங்கித் மனமுடைந்துள்ளார். பின்னர் நிவேதிதா ராஞ்சியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்துள்ளார். நிவேதிதாவைத் தொடர்ந்து ராஞ்சிக்கு வந்த அங்கித் நிவேதிதாவை சுட்டுக் கொன்றுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்