தேசிய செய்திகள்

11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர்கள் கைது

தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஏற்கெனவே அங்கு இருந்த கல்லு என்ற வாலிபர், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன், தனது நண்பர்கள் மூலம் அதனை வீடியோவும் எடுத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றுள்ளது.

இதனை வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், சிறுமியை வீடியோ எடுத்த வாலிபர்கள், அதனை இணையத்தில் பரப்பினர். இதனால் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சிறுமியின் தந்தை சம்பவம் குறித்து போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர். எனினும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து