தேசிய செய்திகள்

அசாம் வெள்ளத்தில் காண்டாமிருகங்கள் உள்பட 200-க்கும் அதிகமான விலங்குகள் உயிரிழப்பு

அசாம் வெள்ளத்தில் காண்டாமிருகங்கள் உள்பட 200-க்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்துள்ளன.

தினத்தந்தி

அசாமில் கனமழை காரணமாக 11 நாட்களாக வெள்ளத்தில் மக்கள் தவித்து வருகிறார்கள். இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 71 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள கசிரங்கா தேசிய பூங்காவில் 40 சதவிதம் நீரில் மூழ்கியுள்ளது. அங்கு விலங்குகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இவ்வகை காண்டாமிருகங்கள் 17 உள்பட 200 விலங்குகள் வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளன. மான்கள் மட்டும் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்