தேசிய செய்திகள்

டெல்லியில் ராஷ்டிரபதி பவன், இந்தியா கேட் பகுதிகளை மறைத்த பனிமூட்டம்

டெல்லியில் கடும் பனிமூட்டத்தினால் ராஷ்டிரபதி பவன், இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகள் மறைக்கப்பட்டன.

புதுடெல்லி,

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தட்பவெப்ப முன்னறிவிப்பில், நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதிக அடர்பனி காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதி பனியால் முற்றிலும் மறைக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் மற்றும் தெற்கு பிளாக் பகுதிகளும் கடும் பனியால் சூழப்பட்டு உள்ளன.

டெல்லி, அரியானா எல்லையையொட்டிய சிங்கு எல்லை, டெல்லி-என்.சி.ஆர்., அக்ஷர்தாம் உள்ளிட்ட பல பகுதிகளும் பனி போர்த்தி காணப்படுகின்றன.

டெல்லியில் காலை முதல் பனி அதிகம் காணப்படும் சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாகன போக்குவரத்து ஆகியவை பாதிப்படைந்து உள்ளன.

தெளிவற்ற வானிலையால் எதிரில் வரும் வாகனங்களை குறைந்த தொலைவிலேயே அடையாளம் காண முடிகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளையும், பின்புற விளக்குகளையும் எரியவிட்டபடி மெதுவாக செல்கின்றன.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி