அதில், முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளத்துடன் கட்சியை இணைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து உபேந்திர குஷ்வாகா கூறுகையில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஒரே கருத்து கொண்ட கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். ஆகவே, என் மூத்த சகோதரர் நிதிஷ்குமார் தலைமையின் கீழ் எங்கள் பயணத்தை தொடர தீர்மானித்துள்ளோம் என்றார்.
உபேந்திர குஷ்வாகா, நிதிஷ்குமாரின் சீடராக இருந்தவர். 2013-ம் ஆண்டு அவரிடம் இருந்து பிரிந்து, ராஷ்டிரீய லோக் சமதா கட்சியை தொடங்கினார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது. அதன் பலனாக, குஷ்வாகாவுக்கு மத்திய மந்திரி பதவி கிடைத்தது. 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை அவர் அப்பதவியில் இருந்தார்.