தேசிய செய்திகள்

கேரளா; வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள் விநியோகம்..!

கேரள பட்ஜெட்டில் நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் நேரடியாக வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள சட்டப்பேரவையில் 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மாநில நிதித்துறை மந்திரி கே.என்.பாலகோபால் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும், அனைத்து தொகுதிகளிலும் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, பட்டியலின சமூகங்கள் உள்ளிட்ட விளிம்புநிலை பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் நேரடியாக வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.2,06,364 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மந்திரி கே.என்.பாலகோபால் தெரிவித்தார். இந்த அறிவிப்பு கேரள மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை