தேசிய செய்திகள்

பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவி காணவில்லை

பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவி காணாமல் போயுள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. #JagannathTemple

தினத்தந்தி

பூரி,

ஒடிசாவில் புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீஜெகந்நாத கோவில் சட்டத்தின்படி, இந்த சாவி மாநில அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். அந்த கோவிலின் இரு கருவூல அறைகளுக்கு 3 சாவிகள் உள்ளன.

ஒரு சாவி கோவில் கருவூலரிடமும், மற்றொரு சாவி பூரி அரசரிடமும் 3வது சாவி கோவில் நிர்வாகத்திடமும் இருக்கும். இந்த சாவிகள் கோவில் கருவூலத்தின் இரு அறைகளை திறப்பதற்கு பயன்படும். ரத்னா பந்தர் எனப்படும் உள் கருவூலத்திற்கு ஒரே ஒரு சாவி உண்டு. ஆனால் அது காணாமல் போயுள்ளது. இதனால் அது திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது.

கோவில் கருவூலத்தில் கடந்த ஏப்ரல் 4ந்தேதி ஆய்வுக்கு பின் அரசு கருவூல அதிகாரியிடம் சாவியை கண்டுபிடிக்கும்படி நீதிபதி கேட்டு கொண்டார். இதில் கடந்த 1985ம் ஆண்டு ரத்னா பந்தர் திறந்த பின்பு கருவூலத்திடம் சாவி ஒப்படைக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் 17 பேர் கொண்ட குழு ஒன்று ஜன்னலின் வழியே ஆய்வு செய்தது. அதில், அதன் உள் அறைகளின் சுவர்களில் விரிசல்கள் இருப்பது தெரிய வந்துள்ளன. அதனை சரி செய்வதற்கு குழு ஆலோசனை வழங்கும் என கூறப்படுகிறது. அதற்கு சாவி தேவைப்படுகிறது. குழுவின் இறுதி ஆய்வு அறிக்கையானது இன்னும் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்